ஈரான் புதிய பாதுகாப்பு அமைச்சர் அமெரிக்காவிற்கு விடுத்துள்ள எச்சரிக்கை
ஈரானின் புதிய பாதுகாப்பு அமைச்சராக மெஹ்தத் அக்லாகி கெதாப்ஜி (Mehrdad Akhlaghi Ketabchi) அந்த நாட்டு நாடாளுமன்றத்தால் பெரும்பான்மை வாக்குகளுடன் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பதவியேற்றுள்ளார்.
பதவியேற்புக்குப் பின் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அதன் நட்பு நாடுகள் ஈரான் மீது மீண்டும் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அமெரிக்காவும் அந்த பிராந்தியமும் "மிகப்பெரிய சேதத்தை" சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.

முன்னதாக, அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் ஈரானின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் உயிரிழந்ததை தொடர்ந்து, இந்த புதிய நியமனம் மற்றும் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.