ஈரான் சுதந்திரத்தை எதிர்பார்க்கிறது, அமெரிக்கா தயாராக உள்ளது ; காய் நகர்த்தும் ட்ரம்ப்
ஈரானில் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதாக டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். ஈரானில் அரசுக்கு எதிராக போராடும் போராட்டக்காரர்களுக்கு உதவத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, டிரம்ப் "ஈரான் சுதந்திரத்தை எதிர்பார்க்கிறது. முன்னெப்போதும் இல்லாதவகையில், அமெரிக்கா உதவத் தயாராக உள்ளது" என்று கூறியுள்ளார்.

அரசுக்கு எதிராக போராட்டம்
ஈரானில் பணவீக்கம் அதிகரித்து மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்ததால் ஆத்திரமடைந்துள்ள மக்கள், கடந்த ஆண்டு டிசம்பா் இறுதியில் இருந்து அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
மேலும், கடந்த 1979-ஆம் ஆண்டு அந்நாட்டில் இஸ்லாமிய புரட்சி நடைபெற்றது முதல், ஈரானில் மதகுருக்கள் ஆட்சி செய்து வரும் மரபை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற குரல்களும் வலுக்கத் தொடங்கியுள்ளன.
இதனிடையே, ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவா்கள் அங்குள்ள நகரங்களைக் கைப்பற்ற வேண்டும் என்று நாடு கடந்து வசிக்கும் அந்த நாட்டு பட்டத்து இளவரசா் ரேஸா பாலவி அழைப்பு விடுத்துள்ளாா்.