டிரம்ப் அச்சுறுத்தலை மீறி உலகக் கோப்பையில் விளையாடத் தயாராகும் ஈரான் அணி

Donald Trump Football United States of America Iran-Israel War
By Sahana Mar 16, 2026 11:36 AM GMT
Report

ஈரான் ஆண்கள் கால்பந்து அணி அமெரிக்க அதிபரின் அச்சுறுத்தலை மீறி வரவிருக்கும் கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை இந்தாண்டு அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோ நாடுகள் இணைந்து நடத்துகின்றன. வருகிற ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.

டிரம்ப் அச்சுறுத்தலை மீறி உலகக் கோப்பையில் விளையாடத் தயாராகும் ஈரான் அணி | Iran Team Play Football Despite Trump Threat

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் உச்சமடைந்துள்ள நிலையில் உலகக் கோப்பை போட்டிகளில் ஈரான் பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ருத் சோசியல் சமூக வலைதளப் பக்கத்தில், “ஈரான் அணி உலகக் கோப்பை போட்டிகளுக்கு வரவேற்கப்படுகிறது.

ஆனால், அவர்களின் உயிர் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நேரத்தில் அவர்கள் இங்கு வருவது சரியாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாகப் பேசிய ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் விண்ட்சர் பால் ஜான், ”நாங்கள் ஈரான் அணி விளையாடுகிறதா, இல்லையா என்பது பற்றி தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

தற்போது வரை அவர்கள் உலகக் கோப்பையில் விளையாடுவது உறுதி. உலகக் கோப்பையில் பங்கெடுக்கவில்லை என அதிகாரப்பூர்வமாக ஈரான் அணி எங்கும் சொல்லவில்லை.

சிறந்த அணியான ஈரான் உலக அரங்கில் நடைபெறும் போட்டியில் கண்டிப்பாக விளையாட வேண்டும். எனவே, அவர்கள் தங்கள் பிரச்னைகளைத் சரிசெய்து உலகக் கோப்பையில் பங்கெடுப்பார்கள்” எனத் தெரிவித்தார்.

டிரம்ப் அச்சுறுத்தலை மீறி உலகக் கோப்பையில் விளையாடத் தயாராகும் ஈரான் அணி | Iran Team Play Football Despite Trump Threat

ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடைபெற்ற ஆசிய பெண்கள் கால்பந்து போட்டிகளில் ஈரான் பெண்கள் அணி பங்கேற்றது. இதில், ஈரான் தேசிய கீதத்தைப் பாட அவர்கள் மறுத்த நிலையில் அவர்களை ஈரான் ‘துரோகிகள்’ என அடையாளப் படுத்தியதாக செய்திகள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து, ஈரான் கேப்டன் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைய வீரர்களுக்கு அனுமதி கேட்டிருந்த நிலையில் தற்போது அதனை மறுத்த அவர்கள், 2 பேர் தவிர்த்து அனைவரும் விமானம் மூலம் மலேசியா வழியே ஈரான் கிளம்பினர்.

ஈரான் பெண்கள் அணி வீரர்களுக்கு அவர்கள் குடும்பத்தினர் மூலம் அரசு கொடுத்த அழுத்தத்தால் அவர்கள் தங்களது முடிவை மாற்றியதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஆஸ்திரேலிய அரசு தங்களது வீரர்களை அங்கே தங்கவைக்க அழுத்தம் கொடுப்பதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US