அமெரிக்காவை சீண்டும் ஈரான் உச்சத் தலைவர் ; அணு சக்தி விவகாரத்தில் அடிபணிய மாட்டோம்
அணு சக்தி விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஈரான் அடிபணியாது என்று அந்நாட்டின் உச்சத் தலைவர் காமேனி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "அமெரிக்கா கொடுக்கும் அழுத்தம் பலன் தராது. ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய 12 நாள் தாக்குதலால் அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடர முடியாது.
தீர்க்க முடியாத பிரச்சனை
அணு சக்தித் திட்டம், தீர்க்க முடியாத பிரச்சனை" என்று தெரிவித்தார்.
கடந்த மாதம், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 12 நாட்கள் கடுமையான மோதல் நிகழ்ந்தது. ஈரானில் அணு விஞ்ஞானிகளையும் ஈரானில் நூற்றுக்கணக்கான மக்களையும் இஸ்ரேல் குண்டுவீசி கொன்றது.
பதிலுக்கு ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலிலும் கடும் சேதங்கள் ஏற்பட்டன. இடையில் அமெரிக்காவும் ஈரானின் 3 அணுசக்தி நிலையங்களை தாக்கியது.
இதன் பாதிப்புகள் இன்னும் மதிப்பிடப்படவில்லை. இருப்பினும் அணுசக்தி நிலையங்களை முற்றிலும் அழித்ததாக அமெரிக்கா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.