மேற்கு ஆசிய பதற்றம் ; 18 அமெரிக்க நிறுவனங்களை குறிவைத்து ஈரான் எச்சரிக்கை
ஈரானின் புரட்சிகர காவற்படை (IRGC), தமது அடுத்த இலக்காக 18 அமெரிக்க நிறுவனங்களின் பெயர்ப்பட்டியலை வெளியிட்டு புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
அதன்படி, ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் முன்னணி அமெரிக்க தொழில்நுட்ப மற்றும் தொழில் நிறுவனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் Apple, Google, Meta, IBM, Tesla மற்றும் Boeing உள்ளிட்ட உலகளாவிய செல்வாக்கு மிக்க நிறுவனங்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் ஈரான் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடி அளிக்கும் நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஈரான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு, சர்வதேச மட்டத்தில் பாதுகாப்பு மற்றும் பொருளாதார அச்சங்களை மேலும் அதிகரித்துள்ளதுடன், உலக தொழில்நுட்பத் துறையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், குறிவைக்கப்பட்டதாக கூறப்படும் நிறுவனங்கள் அல்லது அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ பதிலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.