Protein Bars இல் வெட்டுக்கிளிப் பொடி; கனடாவில் திவாலாகும் நிறுவனம்
கனடாவில் உடற்பயிற்சி செய்பவர்கள் மத்தியில் பிரபலமாக இருந்த புரோட்டீன் பார்களில் (Protein Bars) வெட்டுக்கிளிகள் பொடியாக்கிச் சேர்க்கப்பட்ட விவகாரம் அம்பலமானதை அடுத்து, அத்துறையில் முன்னணியிலிருந்த நிறுவனம் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஒன்ராறியோவில் அமைந்துள்ள இந் நிறுவனம் ஒன்று பாரிய அளவில் வெட்டுக்கிளி வளர்ப்புப் பண்ணை ஒன்றை அமைத்துச் செயற்பட்டு வந்தது. இந்த நிறுவனம் 2013 ஆம் ஆண்டு, இத்திட்டத்திற்காக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் கைகளால் உயரிய விருது ஒன்றையும் பெற்றிருந்தது.

பில் கிளிண்டன் கைகளால் உயரிய விருது
எதிர்கால உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு புரட்சிகரமான முயற்சியாக இது அப்போது பார்க்கப்பட்டது. வெட்டுக்கிளிகளை வளர்ப்பது எளிதான காரியமாக அமையவில்லை.
அவற்றை வளர்த்து, பதப்படுத்தி, பொடியாக்கும் செயல்முறை அதிக செலவீனங்களைக் கொண்டதாக அமைந்தது. இதனால் சந்தையில் இந்தப் பொடியின் விலை மற்ற புரத மூலங்களை விட அதிகமாகக் காணப்பட்டது.
மற்றொருபுறம், தாங்கள் உட்கொள்ளும் புரோட்டீன் பார்களில் வெட்டுக்கிளிகள் சேர்க்கப்பட்டிருப்பதை அறிந்த அமெரிக்க நுகர்வோர் மத்தியில் பெரும் அருவருப்பும், அதிருப்தியும் ஏற்பட்டது.
இதன் காரணமாக விற்பனை கடுமையாகச் சரிந்து, 2025 ஆம் ஆண்டளவில் நிறுவனம் திவாலாகும் நிலையை எட்டியது. தற்போது குறித்த நிறுவனம் மற்றும் அதன் பண்ணை வேறொரு நிறுவனத்திற்குக் கைமாறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், பண்ணையை வாங்கிய புதிய நிறுவனத்தின் விபரங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.