3 முக்கியக் குற்றவாளிகளை தூக்கிலிட்ட ஈராக்
ஈராக்கில், 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற வெடிகுண்டுத் தாக்குதலுக்குக் காரணமான 3 குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர்.
பாக்தாத்தில், கடைகள் மிகுந்த பரபரப்பான வட்டாரத்தில் இடம்பெற்ற வெடிகுண்டுத் தாக்குதலில், 320க்கும் மேற்பட்டோர் அந்தத் தாக்குதலுக்குப் IS பயங்கரவாத அமைப்பு, பொறுப்பேற்றுக்கொண்டிருந்தது.
அமெரிக்காவில் இடம்பெற்ற செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின், உலகில் நடத்தப்பட்ட ஆகக் கடுமையான வெடிகுண்டுத் தாக்குதல்களில் அதுவும் ஒன்று.
முஸ்லிம்களின் புனித மாதம் ரமதான் முடிவுறும்போது, பொதுமக்கள் பலர் பாக்தாத்தின் Karrada வட்டாரத்தில் கூடியிருந்த போது, காரில் இருந்த வெடிகுண்டு வெடித்தது.
இந்நிலையில் "பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட முக்கியக் குற்றவாளிகள் 3 பேருக்கும் தகுந்த தண்டனையாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என பிரதமர் முகமது ஷியா அல் சுடானி (Mohammed Shia al-Sudani) பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்தபோது தெரிவித்தார்.