இப்படி ஒரு குப்பைத் தொட்டியா? இணையத்தை கலக்கும் வீடியோ
பிரித்தானியாவில் “பேசும்” குப்பைத் தொட்டியின் வீடியோ ஒன்று ஆன்லைனில் பலரது கவனத்தைப் பெற்று வருகிறது. ஹாங்காங்கின் டிஸ்னிலேண்டில் இருந்து வைரலாகி வரும் இந்த வீடியோ, குப்பைத் தொட்டி அழுவதையும், குப்பைக்காக கெஞ்சுவதையும் காட்சிப்படுத்துகிறது.
குப்பை தொட்டி என்றால் சாலையோரத்தில் அசையாமல் ஒரே இடத்தில் இருக்கும் தானே. ஆனால் இந்த குப்பைத் தொட்டியோ அங்குமிங்கும் நகர்ந்து, குப்பைகளை என்னிடம் கொடுக்கும்படி தனித்துவமான பாணியில், மக்களிடம் கேட்கிறது.
“நான் குப்பையைச் சாப்பிட விரும்புகிறேன்” என குப்பை தொட்டி கூறுவது இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. மக்கள் தங்கள் குப்பைகளை அப்புறப்படுத்த ஊக்குவிக்கும் இதன் தனித்துவமான அணுகுமுறையாலும் பிரத்யேக பானியாலும் கவனத்தைப் பெறுகிறது.
@luckystarry_hung என்ற பெயரிலுள்ள இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து இந்த வைரல் வீடியோ வெளியாகியுள்ளது.
பொதுமக்களை ஒரு செயலில் சந்தோஷமாக ஈடுபடுத்த தொழில்நுட்பம் மற்றும் நகைச்சுவையை எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பது பற்றிய விரிவான உரையாடலை இந்த வீடியோ தூண்டியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.
இதனுடன் நாள் முழுக்க நான் பேசிக்கொண்டு இருக்கலாம் என்று நினைக்கிறேன்” என்ற வாசகத்துடன் இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. “நான் குப்பையை சாப்பிட விரும்புகிறேன்.
இந்த வீடியோவைப் பார்த்த பல இன்ஸ்டாகிராம் பயனர்கள் வைரலான பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் இதன் ஆக்கப்பூர்வமான முயற்சியைப் பாராட்டியும் வருகின்றனர்.
“குப்பை தொட்டி இப்படிப் பேசுவதற்கு புரோகிராம் செய்யப்பட்டுள்ளதா அல்லது ரிமோட் கண்ட்ரோல் மூலம் யாராவது மைக்கில் பேசுகிறார்களா? தனிப்பட்ட முறையில் இது ஒரு உயிருள்ள பொருள் என்றே நான் நம்புகிறேன்” என ஒருவர் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.