இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புப்பட்ட தமிழீழ போராளிகளின் ஆயுதங்கள்
இஷாரா செவ்வந்திக்கு யாழ்ப்பாணத்தில் அடைக்களம் வழங்கி இந்தியாவுக்கு படகில் செல்வதற்கு உதவிய ஆனந்தனின் வீட்டிலிருந்து தமிழீழ விடுதலை புலிகள் பயன்படுத்தில் இரு கைத்துப்பாக்கிகளை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
நீதிமன்ற வளாகத்திற்குள் சுட்டுக் கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலின் தலைவரான கனேமுல்ல சன்ஜீவ கொலையின் முக்கிய சூத்திரதாரியான இஷாரா செவ்வந்திக்கு இந்திய செல்ல உதவிய ஆனந்தனின் வீட்டிலிருந்தே இந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் தமிழீழ விடுதலை புலிகள்
முன்னாள் தமிழீழ விடுதலை புலிகள் உறுப்பினர் என்று சந்தேகிக்கப்படும் நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்களுடன் இரண்டு வெளிநாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கிகள், இரண்டு மகசின்கள் மற்றும் ஏழு 9MM தோட்டகளும், வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபருக்கு துப்பாக்கிகளை வழங்கிய முன்னாள் தமிழீழ விடுதலை புலிகள் உறுப்பினர் வவுனியாவின் புளியங்குளம் பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இஷாரா செவ்வந்தியை நாடுகடத்தல் சம்பவம் தொடர்பாக பத்து பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
படகுகளை வழங்கிய கைது செய்யப்பட்ட நபர் 52 வயதுடையவர், அதே நேரத்தில் அவருக்கு துப்பாக்கிகளை வழங்கிய நபர் 43 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        