மூன்று கைதிகளுக்காக 183 பலஸ்தீனர்களை விடுவிக்கும் இஸ்ரேல்
இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஐந்தாவது பகுதியாக, 183 பலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக, மூன்று இஸ்ரேலிய கைதிகள் காசாவில் விடுவிக்கப்பட உள்ளனர்.
மனிதாபிமான உதவிகள் மற்றும் பிற முக்கிய பொருட்கள் காசாவிற்குள் கொண்டு செல்வதைத் தடுப்பதன் மூலம் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக ஹமாஸ் குற்றம் சுமத்தியதை தொடர்ந்து கைதிகள் 5 ஆவது தடவையாக விடுவிக்கப்படவுள்ளனர்.
இந்நிலையில் இடிபாடுகளுக்கு அடியில் 12,000க்கும் மேற்பட்ட சடலங்களில் சில இஸ்ரேலிய கைதிகளின் எச்சங்கள் இருப்பதால், அவற்றை ஒப்படைக்க முடியாமல் போகலாம் என்று ஹமாஸ் கூறியுள்ளது.
அதேசமயம் இஸ்ரேல் பளு அதிகமான உபகரணங்கள் என்கிளேவ் பகுதிக்குள் நுழைவதைத் தடுக்கிறது என்று காசா அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை இஸ்ரேல் - காசா மோதல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் 6.75 பில்லியன் டொலர் மதிப்புள்ள குண்டுகள், வழிகாட்டுதல் கருவிகள் மற்றும் உருகிகள், 660 மில்லியன் டொலர் மதிப்புள்ள ஹெல்ஃபயர் ஏவுகணைகளை இஸ்ரேலுக்கு விற்பனை செய்வதில் அமெரிக்க வெளியுறவுத்துறை கையெழுத்திட்டுள்ளது.