காசாவுடனான போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்
ஹமாஸுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் காஸாவில் 2023இல் ஆரம்பமான இஸ்ரேல் - ஹமாஸ் போர் 15 மாதத்துக்கு பின் முடிவுக்கு வருகிறது.
இந்தப் போரால் 46,000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு காஸாவின் மக்கள்தொகையில் 90% பேர் இடம்பெயர்ந்து தங்கள் வாழ்வாதாரங்களைத் தொலைத்துள்ளனர்.
இஸ்ரேல் - ஹமாஸ் ஒப்பந்தம் குறித்த அறிவிப்புக்கு பின் காஸாவில் நடந்த தாக்குதலில் 113 பேர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்கா, கத்தார் நாடுகளின் சமரச நடவடிக்கைகளால் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
காஸாவில் ஹமாஸ் உடனான இஸ்ரேல் போர் நிறுத்தம் ஞாயிறு முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.