இஸ்ரேல் - காஸா போர் நிறுத்தம் எப்போது? ட்ரம்ப் வெளியிட்ட தகவல்
இஸ்ரேல் - காஸா இடையே போர் நிறுத்தம் இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்தில் எதிர்பார்க்கலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
தற்போது இஸ்ரேல் - காஸா இடையே போர்நிறுத்தம் தொடர்பாக இரு தரப்பிலும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
காஸாவில் போர்நிறுத்தம்
இது தொடர்பாக அவர் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சமீபமாக 2 முறை சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்நிலையில் நெதன்யாகுவுடனான சந்திப்பிற்குப் பின்னர் அமெரிக்காவில் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த ட்ரம்ப், "இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்தில் காஸாவில் போர்நிறுத்தம் வர வாய்ப்புள்ளது என நான் நினைக்கிறேன்.
எப்போது என உறுதியாகச் சொல்ல முடியாது. எனினும் இந்த வாரத்தில் இஸ்ரேல் - காஸா இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகலாம். அதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன" என்று தெரிவித்தார்.
ஹமாஸ் வசம் உள்ள இஸ்ரேல் பணயக் கைதிகளை மீட்பதற்காகவே ட்ரம்ப் - நெதன்யாகு இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது.