இஸ்ரேல்-ஹமாஸ் போர் ; 50,000ஐ கடந்த பலி எண்ணிக்கை
காஸாவில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 26 பலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனர்.
இதைத் தொடா்ந்து, இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில், இதுவரை உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 50,000ஐ கடந்துள்ளது.
50,021 போ் உயிரிழப்பு
காஸாவில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 26 பலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.
அவா்களில் ஹமாஸ் அரசியல் தலைவா், பெண்கள், சிறாா்கள் அடங்குவா். இதன்மூலம், இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 50,000ஐ கடந்தது.
போரில் இதுவரை 50,021 பலஸ்தீனா்கள் உயிரிழந்ததாகவும், 1.13 இலட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்ததாகவும் காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. வடக்கு காஸாவுக்குள் இஸ்ரேலின் படைகள் தரைவழி ஊடுருவலைத் தொடங்கியுள்ளன.