04 நாட்களுக்கு நிறுத்தப்படும் இஸ்ரேல் - ஹமாஸ் போர்!
கடந்த ( 07.10.2023) ஆம் திகதியிலிருந்து நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
50 பணயக்கைதிகளுக்கு ஈடாக 4 நாள் போர் நிறுத்தத்திற்கான முன்மொழிவை நாடாளுமன்றம் நிறைவேற்றி உள்ளது.
ஹமாஸ் தரப்பில் இருந்து விடுவிக்கப்படும் பணயக் கைதிகளில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று இஸ்ரேலிய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர்கள் ஒவ்வொரு நாளும் 12-13 பணயக்கைதிகள் கொண்ட குழுக்களாக விடுவிக்கப்படுவார்கள்.
பணயக்கைதிகள் விடுவிப்பு
10 பணயக்கைதிகள் கொண்ட ஒவ்வொரு குழுவையும் விடுவிப்பதற்கு ஈடாக இஸ்ரேல் ஒரு நாள் போர் நிறுத்தத்தை விதிக்கும்.
ஹமாஸ் விடுவிக்கும் பணயக்கைதிகளில் 30 குழந்தைகள், 12 பெண்கள் மற்றும் 8 தாய்மார்கள் உள்ளனர்.
இது தவிர, இந்த ஒப்பந்தத்தின் கீழ் இஸ்ரேல் 150 பாலஸ்தீன கைதிகளையும் விடுவிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.