தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேல் தாக்குதல்; பல உயிரிழப்புகள்
இஸ்ரேல் , தெற்கு லெபனான் முழுவதும் நடத்திய தாக்குதல்களில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளதாக லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தெற்கு லெபனான் டெய்ர் சஹ்ரானிமற்றும் அல்-ஹன்னியே ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மேற்படி உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

காயமடைந்த அனைவரும் சிரிய நாட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்கள் டயர் நகரில் உள்ள வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெய்ட் அல்-சய்யாத் மற்றும் அல்-மன்சூரி ஆகிய இடங்களிலும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், அல்-க்ளைலாபகுதி கடுமையான பீரங்கித் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் துல்லியமான எண்ணிக்கை இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.