அலங்கார செலவுகளுக்காக பல கோடி பணத்தை வீணடித்த நெதன்யாகு!
அலங்கார செலவுகளுக்காக பல கோடி அரச பணத்தை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீணடித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இஸ்ரேலிய பிரதமர்களின் தலைமுடி அலங்காரம், ஒப்பனை மற்றும் உத்தியோகபூர்வ பிரதிநிதித்துவ செலவுகளுக்காக 2019 ஜனவரி முதல் 2026 ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் சுமார் 4,70,000 டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

90 சதவீதத்தை தற்போதைய பிரதமர் பெஞ்சமின்
தகவல் அறியும் உரிமை அமைப்பால் தாக்கல் செய்யப்பட்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகே இந்த விபரங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி ஒட்டுமொத்த ஒப்பனைச் செலவில் சுமார் 90 சதவீதத்தை தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா நெதன்யாகு ஆகியோரே பயன்படுத்தியுள்ளனர்.
2022-ஆம் ஆண்டில் பென்னட் மற்றும் லாபிட் பிரதமர்களாக இருந்தபோது ஒப்பனைச் செலவு சுமார் 84,000 ஷேகல்களாக (ரூ. 26.34 லட்சம்) இருந்த நிலையில், 2023-இல் நெதன்யாகு மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அது 3,11,000 ஷேகல்களாக (ரூ. 97.52 லட்சம்) அதிகரித்தது.
2023 ஒக்டோபரில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்த மாதத்தில் மட்டும் நெதன்யாகுவின் தலைமுடி அலங்காரத்திற்காக சுமார் 77,000 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
2025 பெப்ரவரியில் நெதன்யாகு வோஷிங்டனுக்கு மேற்கொண்ட 4 நாள் பயணத்தின் போது ஒப்பனைக்காக மட்டும் சுமார் 13,500 டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன. ஆடைகள் மற்றும் உபசரிப்பு தொடர்பான பிரதிநிதித்துவச் செலவுகளாக நெதன்யாகு 134,000 டொலர்களைப் பதிவு செய்துள்ளார். ஆனால், பென்னட் 19,000 டொலர்களையும், லாபிட் 2,600 டொலர்களையும் மட்டுமே செலவிட்டுள்ளனர்.
அரசுப் பணம் என்பது தனிப்பட்ட நிதி அல்ல என்பதை அதிகாரிகள் உணர வேண்டும் எனத் தகவல் அறியும் உரிமை அமைப்புகள் விமர்சித்துள்ளன. அதேசமயம் , "தேசிய பாதுகாப்பு" காரணங்களைக் கூறி ஒப்பனைக் கலைஞர்களின் பெயர்களை அரசு இன்னும் மறைத்து வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.