காஸாவில் மீண்டும் போர் தாக்குதலா? இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட புதிய அறிக்கை
காஸா முனையில் மீண்டும் விரிவான தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. ஹமாஸ் அமைப்பால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகத்தின் தகவலின் படி 330 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு நிறுவனம் (ISA- ஷின் பெட்) இணைந்து இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
"கடந்த சில மணிநேரங்களில், 'இஸ்ரேலிய பொதுமக்கள் மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளுக்கு' எதிரான தாக்குதல்களைத் திட்டமிட்டு செயல்படுத்த பயன்படுத்தப்படும் 'பயங்கரவாதிகளின் புகலிடங்கள், ஏவுதளங்கள், ஆயுதக் கிடங்குகள் மற்றும் கூடுதல் ராணுவ உள்கட்டமைப்புகளை' அவர்கள் தாக்கியதாக" அந்த அறிக்கை கூறுகிறது.
"இப்போது, ஐடிஎப் மற்றும் ஐஎஸ்ஏ படைகள் காஸா பகுதி முழுவதும் உள்ள பயங்கரவாத இலக்குகள் மீது தாக்குதல் நடத்திவருகின்றன," என்றும் அறிக்கை கூறுகிறது.