வான்வழித் தாக்குதலில் லெபனானில் 10 பேர் உயிரிழப்பு
இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் லெபனானில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரிடையே தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையிலும், இருதரப்பு எல்லைகளில் மோதல் நீடித்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, தெற்கு லெபனான் பகுதியில் நேற்று இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் சிறுமி மற்றும் 6 மருத்துவ உதவியாளர்கள் உட்பட 10 பேர் கொடூரமாக உயிரிழந்தனர்.
தெற்கு லெபனானில் உள்ள ஹனுயே கிராமத்தை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய முதல் தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் இஸ்லாமிய சுகாதார சங்கத்தைச் சேர்ந்த 4 மருத்துவ உதவியாளர்கள் உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து, டயர் மாகாணத்தில் உள்ள டெய்ர் குவானன் அல் நஹ்ர் கிராமத்தில் இஸ்ரேல் மற்றொரு வான்வழித் தாக்குதலை நடத்தியது.
இதில் சிரியாவைச் சேர்ந்த ஒரு சிறுமி மற்றும் ஹிஸ்புல்லாவின் நட்பு அமைப்பான அமல் இயக்கத்தைச் சேர்ந்த 2 மருத்துவ உதவியாளர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்