லெபனானின் பல்வேறு நகரங்களில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்
லெபனானின் பல்வேறு நகரங்களை இலக்கு வைத்து இஸ்ரேலியப் போர் விமானங்கள் கடும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக லெபனான் அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று இரவு லெபனானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீஃபா (Srifa), ஐதா அல்-ஷாப் (Aita al-Shaab), துலீன் (Touline), சவானா (Sawana) மற்றும் மஜ்தல் செலம் (Majdal Selm) ஆகிய நகரங்களை இலக்கு வைத்து இஸ்ரேலியப் போர் விமானங்கள் இரவு நேரத் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.

தெற்குப் பகுதிக்கு மேலதிகமாக, கிழக்கு லெபனானில் அமைந்துள்ள தூரிஸ் (Douris) நகரத்தின் மீதும் இஸ்ரேலினால் மற்றுமொரு வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக எல்லையோரப் பகுதிகளில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேலியப் படைகள் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.