வைத்தியர் ஒருவரின் ஒன்பது குழந்தைகளையும் பலியெடுத்த இஸ்ரேலிய தாக்குதல்
காஸா மீதான இஸ்ரேலிய விமானத் தாக்குதல் மருத்துவரின் வீட்டைத் தாக்கியதில் அவரது 10 குழந்தைகளில் ஒன்பது குழந்தைகள் கொல்லப்பட்டதாக கான் யூனிஸ் நகரில் உள்ள வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
காஸாவின் தெற்கு நகரமான கான் யூனிஸில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு நாசர் வைத்தியசாலையின் குழந்தை மருத்துவரான அலா நஜ்ஜாரின் வீடு தீப்பிடித்து எரிந்ததையடுத்து அவரது கணவர் பலத்த காயமடைந்ததோடு ஒன்பது குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்களில் ஒரு குழந்தை மாத்திரமே உயிர் பிழைத்துள்ளார்.
இறந்த குழந்தைகள் ஏழு மாதங்கள் முதல் 12 வயது வரை உள்ளவர்கள் என்று ஃபரா கூறினார். சமீபத்திய நாட்களில் காஸா பகுதி முழுவதும் 100க்கும் மேற்பட்ட இலக்குகளை இஸ்ரேலிய விமானப்படை தாக்கியுள்ளது.
இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 79 பேர் கொல்லப்பட்டதாக காஸா சுகாதார அமைச்சரகம் தெரிவித்துள்ளது.