ஹமாஸ் தாக்குதலில் இறுதி முத்தத்தை பரிமாறிய இஸ்ரேல் ஜோடிகள்!
இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் கடந்த சனிக்கிழமை மேற்கொண்ட தாக்குதலின் போது, இஸ்ரேல் காதலர்கள் ஒருவரை ஒருவர் முத்தமிட்டுக்கொண்ட புகைப்படமொன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை ( 7) யாருமே எதிர்பார்க்காத வகையில் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் மோசமான தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.
இறுதியாக முத்தமிட்டவாறு செல்பி
ஹமாஸ் தாக்குதலில் இசை நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட 260 பேர் உட்பட 1000 க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் குறித்த இசை நிகழ்ச்சில் கலந்து கொண்ட காதல் ஜோடியொன்று தாம் உயிரிழக்கப்போகிறோம், என எண்ணி இறப்பதற்கு முன்னதாக இறுதியாக முத்தமிட்டவாறு செல்பியொன்றை எடுத்துள்ளனர்.
எனினும் அதிஷ்டவசமாக குறித்த காதல் ஜோடி உயிர் பிழைத்துள்ளனர்.
இந்நிலையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் குறித்த புகைப்படத்தை அவர்கள் இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.