காசா மருத்துவமனையை முற்றுகையிட்ட இஸ்ரேலிய படையினர்
காசாவின் அல் அவ்டா மருத்துவமனை இஸ்ரேலிய படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளதாக அதன் இயக்குநர் முகமட் சல்ஹா தெரிவித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனை முழுமையான முற்றுகையின் கீழ் உள்ளது, வெளியிலிருந்து நோயாளர்களை உள்ளே எடுக்க முடியாத நிலையில் உள்ளோம் என முகமட் சல்ஹா தெரிவித்துள்ளார்.
ஆளில்லா விமானம் தாக்குதல்
ஆளில்லா விமானம் ஒன்று மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளில் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளது.
டாங்கிகளின் துப்பாக்கி பிரயோகத்தையும் கேட்க முடிகின்றது 400-500 மீற்றர் தொலைவில் இது இடம்பெறுகின்றது என அவர் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.
ஆனால் அதன் பின்னர் அனுப்பிசெய்தியில் நான் பாதுகாப்பாகயிருக்கின்றேன் ஆனால் நிலைமை மிக மோசமாக உள்ளது என அல் அவ்டா மருத்துவமனை இயக்குநர் முகமட் சல்ஹா தெரிவித்துள்ளார்.
தடைகள் காரணமாக மருத்துவபொருட்கள் போதாமையினால் இந்த மருத்துவமனை இயங்குவதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளது.