மகனைக் கொல்ல சதி; அச்சத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
தனது மகன்களில் ஒருவரைக் படுகொலை செய்ய ஈரான் அரசுத் திட்டம் தீட்டித் தாக்குதல் நடத்த முயன்றதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளமை சர்வதேச அளவில் பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் தொலைக்காட்சி ஊடகத்திற்குத் அளித்த பேட்டியில், நெதன்யாகு பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். இதன்போது யாராலும் நம்ப முடியாத அளவுக்கு ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

ஈரானிய உளவு அமைப்பைச் சேர்ந்த உளவாளிகள்
ஈரானிய அமைப்புகள் என் மகனை இலக்கு வைத்து அவரைக் படுகொலை செய்யத் தீவிர முயற்சி மேற்கொண்டதாக அவர் கூறியுள்ளார். 35 வயதான நெதன்யாகுவின் மூத்த மகன் யாயிர் நெதன்யாகுவே (Yair Netanyahu) இந்தச் சதியில் இலக்காக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மியாமி பகுதியில் தங்கியிருந்த யாயிர் நெதன்யாகுவை ஈரானிய உளவு அமைப்பைச் சேர்ந்த உளவாளிகள் ரகசியமாகக் கண்காணித்து வந்ததை இஸ்ரேலின் ‘ஷின் பெட்’ (Shin Bet) உளவுத்துறை கண்டறிந்து அமெரிக்கப் பாதுகாப்பு நிறுவனங்களை எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த ஆபத்தான தகவலைத் தொடர்ந்து, உயிருக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் யாயிர் நெதன்யாகு தனது உடமைகளைக்கூட எடுக்காமல் உடனடியாகப் புளோரிடாவில் இருந்து இஸ்ரேலுக்குத் திரும்ப அறிவுறுத்தப்பட்டுப் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டார்.
இஸ்ரேலில் விரைவில் தேர்தல் வரவுள்ள சூழலில், அனைத்து முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு முழு அளவிலான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், இல்லையென்றால் எதிரி நாடுகள் தங்களது சதித்திட்டத்தில் வெற்றி பெற்றுவிடும் என்றும் நெதன்யாகு இந்த நிகழ்வைச் சுட்டிக்காட்டி வலியுறுத்தியுள்ளார்.
மறுபுறம், ஈரானிய ஊடகங்கள் சமீபத்தில் அமெரிக்கத் தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரைக் இலக்கு வைக்கும் விடியோக்களை வெளியிட்டு அச்சுறுத்தி வருகின்றது.
இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமரின் மகனுக்கும் இத்தகைய ஆபத்து நேர்ந்துள்ள தகவல் இரு நாடுகளுக்கும் இடையேயான உளவுத்துறைப் போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.