புத்தாண்டின் முதல் நாளில் 156 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு
புத்தாண்டின் முதல் நாளான இன்று (01.01.2024) இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 156 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் – காஸா இடையே கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய போரானது இதுவரையிலும் தொடர்ந்து வருகிறது.
இஸ்ரேல், காஸா மீது தொடர் தாக்குதல்களை நடத்தி 20,000-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இத்தாக்குதல்களில் மருத்துவமனைகளும் குறிவைக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
அதற்கு பதிலளித்த இஸ்ரேல், காஸா மருத்துவனைகளை பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தி வருவதாக கூறியது.
ஆங்கில புத்தாண்டான இன்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் ராணுவம் காஸா எல்லையில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
தொடர்ந்து, காஸாவின் ஜபாலியா பகுதியை நோக்கி இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதனைத் தொடர்ந்து, மத்திய காஸாவிலுள்ள மகாஸி முகாம் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல் ராணுவம் நடத்திய இந்த தாக்குதலில், கடந்த 24 மணிநேரத்தில் 156 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 246 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 21,978-ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 56,697 பேர் படுகாயமடைந்துள்ளதாக காஸா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.