மாணவர் விசாவில் ஐ.எஸ் ஆதரவாளர் கனடாவுக்குள் நுழைந்த விவகாரம்: சர்வதேச மாணவர்களுக்கு சிக்கல்
கனடா அரசு ஏற்கனவே புலம்பெயர்ந்தோருக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இந்நிலையில், ஐ.எஸ் ஆதரவாளர் ஒருவர் மாணவர் விசாவில் கனடாவுக்குள் நுழைந்த விவகாரம் சர்வதேச மாணவர்களுக்கு சிக்கலை அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யூத மையம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட Muhammad Shahzeb Khan (20) என்னும் நபர் கியூபெக்கில் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
அவர், 2023ஆம் ஆண்டு, மே மாதம், மாணவர் விசாவில் கனடாவுக்கு வந்தது தெரியவந்துள்ளது.
கனடா அரசு ஏற்கனவே புலம்பெயர்ந்தோருக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், முகமது ஷாசீப் கான் மாணவர் விசாவில் கனடாவுக்கு வந்துள்ளதால், சர்வதேச மாணவர்கள் மேலும் சிக்கலுக்கு ஆளாகியுள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், நாட்டில் புலம்பெயர்தல் எதிர்ப்பு அலை பரவிவரும் நிலையில், சர்வதேச மாணவர்களுக்கு ஆதரவளிக்க அரசியல்வாதிகள் யாரும் முன்வரவில்லை.
ஆக, சர்வதேச மாணவர்களுக்கு தற்போது மக்கள் ஆதரவும் இல்லை, அரசியல்வாதிகளின் ஆதரவும் இல்லை.
எனவே, வேறு வழியில்லாமல் மாணவர்கள் சிலர் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.
மற்றவர்களோ, கனடாவில் எப்படியாவது தொடர்ந்து தங்குவதற்காக திருமணம் செய்வது போன்ற நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளார்கள்.