இத்தாலியில் பயங்கரம்; காரை உடைத்து மணப்பெண் பாலியல் வன்கொடுமை
இத்தாலியில் இளம் இத்தாலிய ஜோடி ஒன்று கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கார் ஒன்றில் இருந்த 18 வயதான மணப்பெண்ணை, மூன்று நபர்கள் கொண்ட குழு ஒன்று பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அவரது காதலனை இந்தச் சம்பவத்தைப் பார்க்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர்.

பாலியல் வன்கொடுமை
இளம் ஜோடி, தங்கள் காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, மூன்று நபர்கள் கொண்ட குழுவால் வழிமறிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் முதலில் இளம் ஜோடி இருந்த காரின் கண்ணாடியை உடைத்து அவர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளனர். பின்னர், 18 வயதான இளம் பெண்ணின் காதலனை வலுக்கட்டாயமாகப் பிடித்து வைத்துக்கொண்டு, அவர் கண்முன்னேயே பெண்ணை அவர்கள் வன்முறையாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்தக் கொடூரச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மணப்பெண்ணும், அவரது காதலரும் மிகுந்த அதிர்ச்சியிலும் மன உளைச்சலிலும் உள்ளனர்.
இத்தகைய கொடூரமான செயல் இத்தாலிய சமூகத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் உடனடியாக இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.