புறப்பட்ட சில வினாடிகளில் கடலில் பாய்ந்த விமானம் ; மரணத்தின் விழிம்புக்கு சென்ற பயணிகள்!
இத்தாலியில் ஒரு பட்ஜெட் விமானம் (Budget Airline Jet) புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, கட்டுப்பாட்டை இழந்து கிட்டத்தட்ட மணிக்கு 300 மைல் வேகத்தில் (300 mph) கடலை நோக்கிப் பாய்ந்த நிலையில், கடைசி நேரத்தில் தப்பிய திகிலூட்டும் சம்பவம் வெளியாகியுள்ளது.
விமானம் கடலின் மேற்பரப்பில் இருந்து 200 அடிக்கும் குறைவான உயரத்தில் (less than 200ft) இருந்தபோது, கடைசி நேரத்தில் விமானி சுதாரித்து விமானத்தை மீண்டும் மேல்நோக்கி இயக்கியதால் ஒரு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. ‘
பயத்தில் உறைந்த பயணிகள்
ஜெய்ட்2’ (Jet2) என்ற பட்ஜெட் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான போயிங் ரக பயணிகள் விமானம். விமானம் இத்தாலிக்கு அருகில், ஸ்பெயினின் இபிஸா (Ibiza) நகரில் இருந்து புறப்பட்ட சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு இந்தச் சம்பவம் நடந்தது.
விமானம் சுமார் 40-50 டிகிரி கோணத்தில், தலைகீழாகக் கடலை நோக்கி வேகமாகப் பாய்ந்த நிலையில் பயணிகள் அனைவரும் பயத்தில் உறைந்தனர்.
விமானத்தின் கேபினில் உள்ள அழுத்தம் குறைந்ததாலோ (Cabin Pressure Drop) அல்லது ஒரு சிறிய தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவோ (Minor Technical Issue) விமானி அவசரமாக விமானத்தை கீழ்நோக்கிக் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானிகள் “அவசர இறக்கம்! அவசர இறக்கம்!” (Emergency Descent) என்று கத்திய சத்தம் பயணிகளுக்குக் கேட்டதாகவும் கூறப்படுகின்றது. உடனடியாக விமானத்தில் இருந்த ஆக்சிஜன் முகமூடிகள் (Oxygen Masks) தானாகவே கீழே வந்தன.
இதுதான் முடிவு என்று நினைத்து மனைவிக்கு ‘ஐ லவ் யூ’ குறுஞ்செய்தி
பயணிகளில் ஒருவர், “விமானம் தொடர்ந்து கடலை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. கீழே கடல் மட்டுமே தெரிந்தது. இதுதான் முடிவு என்று நினைத்து எனது மனைவிக்கு ‘ஐ லவ் யூ’ என்று குறுஞ்செய்தி அனுப்பினேன்,” என்று திகிலுடன் கூறியுள்ளார்.
எனினும் கடலின் மேற்பரப்புக்கு மிக அருகில் (200 அடிக்கும் குறைவாக) வந்தபோது, விமானம் மீண்டும் நிலைப்படுத்தப்பட்டது. பின்னர், விமானம் பாதுகாப்பான உயரத்தில் பறந்து, பாரசிலோனா (Barcelona) விமான நிலையத்தில் திட்டமிடப்படாத தரையிறக்கத்தைச் (Unplanned Landing) செய்தது.
பாரிய விமான விபத்து தவிர்க்கப்பட்டதால் பயணிகள் நிம்மதியடைந்தனர். விமான நிறுவனம் இந்தச் சம்பவத்திற்காகப் பயணிகளிடம் மன்னிப்புக் கோரியது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட அழுத்தக் குறைவைச் சமாளிப்பதற்காகவே விமானி அவசரமாகக் கீழ்நோக்கிக் கொண்டு வந்ததாக கூறப்படும் நிலையில், விமான பயணிகளுக்கு மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பிய திகில் அனுபவமாக அமைந்தது.