கனடாவில் 50 ஆண்டுகளின் பின்னர் வீடு திரும்பிய நபர்
கனடாவில் சுமார் 50 ஆண்டுகள் கழித்து தனது குடும்ப உறுப்பினர்களை சந்தித்த நெகிழ்ச்சியான சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
தனது பூர்வீக உறவுகளையும் குடும்பத்தினரையும் சந்திப்பதற்காக ஜோனத்தன் ஹூக்கர் என்ற நபர் மனிடோபாவுக்கு திரும்பியுள்ளார் தனது குடும்பத்துடன் மீள இணைந்து கொள்வதற்காக இவ்வாறு மனிடோபா திரும்பியதாகத் தெரிவித்துள்ளார்.
தாம் தத்தெடுக்கப்பட்டவன் என்பதைக் குழந்தை பருவத்திலிருந்தே அறிந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும் உண்மையை தெளிவாக புரிந்துகொள்ள சில ஆண்டுகள் கடந்து விட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
1975ல் ஆண்டில் ஹூகக்ர் வெறும் 18 மாத இருந்த நிலையில் பூர்வீக குடும்பத்திலிருந்து பிரிக்கப்பட்டு, பின்னர் வெள்ளை குடும்பமொன்றால் தத்தெடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அந்தக் குடும்பத்தினர் தம்மை நியூசிலாந்துக்கு அழைத்துச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார். 50 ஆண்டுகளின் பின்னர் பெற்ற தாயான பேட்சி ஜார்ஜை முதல்முறையாக சந்தித்ததாக குறிப்பிடுகின்றார்.
தாயாரை மீண்டும் பார்க்க முடியாது என நினைத்ததகாவும் மிக இளவயதில் சிசுவாக இருந்த போதே தாயாரிடமிருந்து தாம் பிரிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
மனிடோபா பழங்குடியினத் தலைவர்கள் இதை “ஒரு புதிய தொடக்கம்” என வர்ணித்து, இத்தகைய மீளிணைப்பு இன்னும் பல குடும்பங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.
கனடாவில் பழங்குடியின குழந்தைகள் பலர் இவ்வாறு குடும்பங்களிடமிருந்து பிரிக்கப்பட்டு வேறு நபர்களுக்கு தத்து கொடுக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.