கனடாவுக்கு செல்ல முயன்ற யாழ் இளைஞன் கட்டுநாயக்காவில் கைது
போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச் செல்ல கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு வந்த இளைஞன் ஒருவர் குடிவரவுக் குழுவினரால் நேற்று (2024.06.05) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
போலி கடவுச்சீட்டு
விமான அனுமதியை முடித்துவிட்டு குடிவரவு கவுண்டருக்கு வந்து அங்கு பணிபுரியும் குடிவரவு அதிகாரியிடம் கடவுச்சீட்டை வழங்கிய போது, கடவுச்சீட்டில் உள்ள புகைப்படத்திற்கும் அவரது புகைப்படத்திற்கும் வித்தியாசம் காணப்பட்டதால்,
கடவுச்சீட்டு பற்றிய கூடுதல் தகவல்களைக் கண்டறியும் வகையில், குடிவரவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கடவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் உள்ளிடப்பட்டுள்ளன.
இதன்போது கடவுச்சீட்டை வைத்திருப்பவர் நாட்டை விட்டு வெளியேற திருகோணமலை நீதிமன்றம் தடை விதித்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
இதன்படி, இந்த இளைஞனை குடிவரவு திணைக்களத்தின் எல்லை அமுலாக்கல் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனையடுத்து குறித்த இளைஞனின் பெட்டியினை சோதனை செய்தபோது அவரது உண்மையான தேசிய அடையாள அட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கனடா சென்ற பின்னர் அனுராதபுர நகரத்தில் உள்ள தரகர் ஒருவர் தனக்கு ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபாவை தருவதாக உறுதியளித்து கனடாவில் செல்லுபடியாகும் இந்த கடவுச்சீட்டை பெற்றுக்கொடுத்ததாக இளைஞன் தெரிவித்துள்ளார்.