யாழில் திடீரென்று சொர்க்கம்போல் மாறிய இடம் தற்போது நரகமாக
யாழ்ப்பாணத்தின் தென்மராட்சியிலுள்ள அழகிய கால்வாய் ஒன்றைப் பார்ப்பதற்காக குடா நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் படையெடுப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தது.
குறித்த கால்வாயின் கண்ணைக் கவரும் அழகிய தோற்றம் இலங்கையிலுள்ள சில அழகான ஆறுகளை ஞாபகமூட்டுவதாக முக நூலில் பலரும் பகிர்ந்து கொண்டாடினர்.
யாழ் தென்பராட்சியின் சாவகச்சேரி பகுதியிலுள்ள இல்வாரை எனும் கிராமத்தில் குறித்த கால்வாய் காணப்படுவதுடன் இது கடந்த வருடம் புனரமைப்புச் செய்யப்பட்டதாக கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
குறித்த நீர் வாய்க்காலுடன் மரங்கள் ஒன்று கூடி பச்சை பசேலென அழகானதும் அமைதியான வயல் பகுதி அங்கு செல்வோரை இனம்புரியாத அமைதியில் ஆழ்த்துவதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் சொர்க்கம்போன்று இருந்த இடம் இன்று நரகம் போல் மாறியுள்ளது, ஆம் குறித்த இடம் செய்திகளில் வெளியாகி இன்னும் பிரபலமடைந்த நிலையில் மது போத்தல்களுடன் பல இளைஞர்கள் சென்று மது அருந்தி வருவதாகவும், ஆங்காங்கே மது போத்தல்கள் மற்றும் பல கழிவுகள் போடப்பட்டு, அந்த இடத்தின் அழகை சீரழிக்கிறார்கள் என்றும் மன வேதனை அடைகின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.





