ஜோ பைடனுக்கு மகனால் ஏற்பட்ட தலைகுனிவு; அமெரிக்க வரலாற்றில் முதல் தடவை
துப்பாக்கி கொள்வனவு தொடர்பான 3 குற்றச்சாட்டுகளில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன், குற்றவாளியென அறிவிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கியை கொள்வனவு செய்தவேளை தான் போதைப்பொருள் பாவனை தொடர்பில் ஹன்டர் பொய் கூறியமை தொடர்பில் இரண்டு குற்றச்சாட்டுகளும், போதைப்பொருளிற்கு அடிமையான வேளை துப்பாக்கிகளை வைத்திருந்த ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது.
ஹண்டர் பைடனுக்கு சிறைத்தண்டனை
எனினும் தாம் குற்றமற்றவரென வாதிட்ட ஹண்டர் பைடன், அந்த நேரத்தில் தாம் போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீண்டு வந்ததாகக் கூறியுள்ளார்.
இந்த தீர்ப்பை அடுத்து ஹண்டர் பைடனுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படலாமென சட்டநிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை பதவியில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதியொருவரின் மகன் குற்றவாளியாக தண்டிக்கப்படுவது இதுவே முதல்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.