ஜப்பான் – கனடாவிற்கு இடையில் புலனாய்வுத் தகவல்கள் பரிமாற்றம்
ஜப்பான் மற்றும் கனடாவிற்கு இடையில் புலனாய்வுத் தகவல்கள் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவப் புலனாய்வுத் தகவல்கள் இவ்வாறு பரிமாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரு நாடுகளுக்கும் இடையில் இராணுவ புலனாய்வுத் தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ளும் உடன்படிக்கை குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
பாதுகாப்பு, பொருளாதார பாதுகாப்பு மற்றும் ஏனைய விவகாரங்களில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகளினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை முறியடிக்கும் நோக்கில் இவ்வாறு புதிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளது.
கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலானி ஜோலி ஜப்பானிய தலைநகர் டோக்கியோவிற்கு விஜயம் செய்துள்ளார்.