ஒலிம்பிக் போட்டியை விரும்பாத ஜப்பான் நாட்டின் மக்கள்
ஜப்பான் நாடு மக்களிடம் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் அவர்களுக்கு ஒலிம்பிக் போட்டி நடத்துவதில் விருப்பமின்மை தெரியவந்தது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி தள்ளிவைக்கப்பட்டு இந்த ஆண்டில் வருகிற ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடத்தப்படுகிறது.
ஆனால் ஜப்பானில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பு, சில நகரங்களில் அவசரநிலை கட்டுப்பாடுகள் விதிப்பு காரணமாக இந்த போட்டியை நடத்த அங்குள்ள மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
ஜப்பானில் செய்தி நிறுவனம் ஒன்று நடத்திய கருத்து கணிப்பில் 59 சதவீத மக்கள் டோக்கியோ ஒலிம்பிக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். 12.6 சதவீத பேர் மட்டுமே ஒலிம்பிக்கை நடத்த ஆதரவு குரல் கொடுத்துள்ளனர்.