ட்ரம்ப் உடனான நட்பை முறித்து புது Friend பிடித்த எலான் மஸ்க்
உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க் கடந்த ஜூலை மாதம் டிரம்ப் நிர்வாகத்தால் கொடுவரப்பட்ட வரி குறைப்பு மற்றும் செலவு மசோதாவை கடுமையாக எதிர்த்த, ஜனாதிபதி ட்ரம்ப் உடனான நட்பை முறித்துக்கொண்டார்.
அந்த மசோதா நிறைவேற்றப்பட்ட உடனேயே, புதிய அரசியல் கட்சியை தொடங்குவதாக ஒரு பரபரப்பான அறிக்கையை வெளியிட்டார்.
துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ்
2026 இடைக்காலத் தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்பதையும் மஸ்க் அப்போது தெரிவித்திருந்தார்.
மேலும் குடியரசு கட்சியின் எதிர்கால வாரிசாகக் கருதப்படும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸுடன் மஸ்க் கடந்த சில வாரங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வால் ஸ்ட்ரீட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
2028 ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக ஜே.டி. வான்ஸை ஆதரிக்க மஸ்க் ஆர்வமாக உள்ளார் என அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.