ஜப்பான் பிரதமர் இராஜினாமா செய்ய முடிவு
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா இராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆளும் கட்சிக்குள் பிளவு ஏற்படாமல் தடுக்கும் நோக்கத்துடன் இந்த முடிவு எடுத்திருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி தலைமைப்பதவி
இந்தாண்டு ஜூலை மாதம் நடந்த தேர்தலில் ஆளும் கட்சி, பெரும்பான்மையை இழந்து விட்டதையடுத்து இதற்கு பொறுப்பேற்று பிரதமர் இராஜினாமா செய்ய வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், கட்சி தலைமைப்பதவிக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தலாமா என்பது பற்றி நாளை (8) லிபரல் டெமாக்ரடிக் கட்சி முடிவு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதை கட்சியின் நிர்வாகிகள் அங்கீகரிக்கும் பட்சத்தில், ஷிகெரு இஷிபா பதவி விலக வேண்டியிருக்கும். அதை தவிர்க்கும் நோக்கத்தில், அவர் தானாகவே இராஜினாமா செய்ய முன் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.