காதலனை மணந்தார் ஜப்பான் இளவரசி
அரச பட்டத்தை துறந்துவிட்டு எளிய முறையில் காதலரை கரம் பிடித்தார் ஜப்பான் இளவரசி
ஜப்பான் மன்னர் நருகிடோவின் இளைய சகோதரர் புமிகிடோ. இவரது மகள் மகோ (29).
இளவரசியான இவர் தன்னுடைய கல்லூரி கால நண்பரான கீ கோமுரோவை காதலித்து வந்தார்.
சுமார் 5 ஆண்டு கால காதலுக்கு பின்னர், தங்களுடைய திருமண அறிவிப்பை 2017ம் ஆண்டு வெளியிட்டார்.
அப்போதே ஊடகங்களில் பரபரப்பான நிலையில், பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர், மேலும் அரச பட்டத்தை துறந்தால் மட்டுமே சாமானிய நபரை திருமணம் செய்து கொள்ள முடியும்.
இதனை ஏற்றுக்கொண்ட இளவரசி மகோ, தன்னுடைய காதலனை கரம்பிடிக்க முடிவெடுத்தார்.
அது மட்டுமின்றி ஜப்பானிய அரச குடும்பத்து வழக்கப்படி, அரச குடும்பத்தில் இருந்து வெளியேறுவோருக்கு வழங்கப்படும் 1.3 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.9 கோடியே 63 லட்சம்) பணத்தையும் பெற மகோ மறுத்துவிட்டார்.
இந்நிலையில் நேற்று இருவருக்கும் எளிய முறைப்படி திருமணம் நடந்து முடிந்தது, ஜப்பானிய அரச குடும்பத்தின் பாரம்பரிய சடங்குகள் மற்றும் கொண்டாட்டங்கள் எதுவுமில்லாமல் நடந்து முடிந்தது.
இந்த திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜப்பானில் சில இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.