விண்ணில் ஏவப்பட்ட சில வினாடிகளில் வெடித்து சிதறிய தனியார் நிறுவனத்தின் ராக்கெட்!
ஜப்பானை சேர்ந்த ஸ்டார்ட் அப் ஸ்பேஸ் ஒன் என்ற தனியார் விண்வெளி நிறுவனம், விண்ணில் ராக்கெட்டை செலுத்திய சில வினாடிகளில் திடீரென்று நடுவானில் வெடித்து சிதறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தினால் வானில் பெரும் புகைமூட்டம் ஏற்பட்டது. ராக்கெட்டின் பாகங்கள் கீழே விழுந்ததில் சில இடங்களில் தீப்பிடித்த நிலையில் தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈட்டனர்.
மேலும், ஜப்பானில் முதல் முறையாக தனியார் நிறுவனம் ஒன்று ராக்கெட் விண்ணில் செலுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
இந்த திட்டம் வெற்றி பெற்றிருந்தால் ஜப்பானில் ராக்கெட்டை விண்ணில் செலுத்திய முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை ஸ்டார்ட் அப் ஸ்பேஸ் ஒன் நிறுவனம் பெற்றிருக்கும்.
ராக்கெட் வெடித்து சிதறியதற்கான காரணம் தொடர்பில் ஸ்டார்ட் அப் ஸ்பேஸ் ஒன் உடனடியாக எந்த பதில் அளிக்கவில்லை.