அதிக வயோதிபர்கள் உள்ள நாடாக மாறும் ஜப்பான்
வரலாற்றில் முதன்முறையாக ஜப்பானில் பத்து பேரில் ஒருவர் 80 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் தேசிய புள்ளி விவரங்களின்படி, 125 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஜப்பானில் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் சதவீதம் 29.1% ஆக உயர்ந்துள்ளது.
மிகக் குறைவான பிறப்பு விகிதங்களைக் கொண்ட நாடு
அதேவேளை உலகிலேயே மிகக் குறைவான பிறப்பு விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஜப்பான் கருதப்படுகிறது. மேலும் அதன் வயதான மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வரும் நிலையில் அதிக நேரம் வேலை செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
அதேவேளை நாட்டின் பிறப்பு வீதத்தின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.