ஊழியர்களை நின்றபடியே தூங்க சொல்லும் நிறுவனம்!
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று முக்கியமான கையெடுப்பு ஒன்றை முன்னெடுத்து உள்ளது அதாவது அலுவலக வேலைக்கிடையே தூக்கம் வந்தால் அந்த ஊழியர்கள் நின்றபடியே வசதியாக தூங்கலாம் என கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தன்னுடைய ஊழியர்கள் ஸ்ட்ரெஸ் இல்லாமல் வேலை செய்வதற்கு முக்கியமான ஏற்பாட்டை அந்த ஜப்பான் நிறுவனம் செய்திருக்கிறது.

அதற்காக அந்த அலுவலகத்தில் Nap Box என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த பெட்டியினுள் ஊழியர்கள் உட்புறமாக தாழிட்டு நின்றபடியே தூங்கி கொள்ளலாம்.
அனைத்து வசதியை கொண்டும் எம்மை தாங்கும் வகையிலும் உள்ளே செல்பவர் கீழே விழாமல் இருப்பதாய் உறுதி செய்யும் வகையிலும் அந்த nap box வடிவமைக்கப்பட்டுள்ளது.

Kamin Box என அழைக்கப்படும் இந்த பெட்டியை டோக்கியோவை சேர்ந்த itoki என்ற பெர்நிச்சர் நிறுவனத்துடன் இணைந்து Koyoju plywood corporation உருவாக்கியுள்ளது.
அந்த பெட்டியுள் ப்ளமிக்கோ பறவை போல ஊழியர்கள் தூங்கி கொள்ளலாம் என அதன் இயக்குனர் சாகோ கவாஷிமா bloomberg செய்தியிடம் கூறியிருக்கிறார். 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        