ஜப்பானில் அரசியல் பிரச்சாரத்தை கைப்பற்றிய AI தொழில்நுட்பம்

Japan Election Artificial Intelligence
By Sahana Feb 01, 2026 04:38 AM GMT
Sahana

Sahana

Report

ஜப்பான் நாடாளுமன்றத்திற்கு இம்மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்குள்ள அரசியல் கட்சிகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெளியிடும் போலி காணொளிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

இது வாக்காளர்கள் மத்தியில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாகத் தேர்தல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஜப்பானில் வரும் பெப்ரவரி 8 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

மொத்தம் உள்ள 465 இடங்களில், ஆட்சியைப் பிடிக்க 233 இடங்களைக் கைப்பற்ற வேண்டும். ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள சூழலில், இந்தப் புதிய 'டிஜிட்டல் போர்' கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானில் அரசியல் பிரச்சாரத்தை கைப்பற்றிய AI தொழில்நுட்பம் | Japanese Voters Are Being Harassed Fake Ai Videos

தற்போது ஜப்பானிய வாக்காளர்களைக் குறிவைத்து சமூக வலைதளங்களில் செயற்கை நுண்ணறிவு காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளன. தாய்வான் விவகாரம் தொடர்பாக பிரதமர் சானே தக்காயிச்சி ஆற்றிய உரையை அடிப்படையாகக் கொண்டு, அவருக்கு ஆதரவாக ஒரு முதியவர் பேசுவது போன்ற 15 வினாடி AI காணொளி வைரலாகி வருகிறது.

30 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்த இந்த காணொளி, உண்மையில் ஒரு AI தயாரிப்பு என்பது பலருக்குத் தெரியவில்லை. செய்தி நிறுவனங்களின் விவாதங்கள் மற்றும் தெருக்களில் பொதுமக்கள் பங்கேற்கும் கருத்துக்கணிப்புகள் போன்ற தோற்றத்தில் AI காணொளிகள் உருவாக்கப்படுகின்றன.

இவை 5 முதல் 10 லட்சம் பார்வைகளைப் பெற்று வைரலாகின்றன. இந்த காணொளிகளின் தலைப்பிலோ அல்லது அலைவரிசை பெயரிலோ 'AI' என்ற குறிப்பு எங்கும் இடம்பெறுவதில்லை. விளக்கப் பக்கத்தில் மிகச்சிறிய அளவில் மட்டுமே குறிப்பிடப்படுவதால், பெரும்பாலான வாக்காளர்கள் இவற்றை உண்மை என்றே நம்பி ஏமாறுகின்றனர்.

ஜப்பானின் ரிட்சுமேய்கன் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் சுகாசா தனிஹாரா இது குறித்துக் கூறுகையில், இத்தகைய காணொளிகள் ஒரு குறிப்பிட்ட கருத்துக்கு மக்களிடையே பெரும் ஆதரவு இருப்பது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்குகின்றன.

பின்னணியில் வரைபடங்கள் மற்றும் தரவுகளைச் சேர்த்து இவை தயாரிக்கப்படுவதால், மக்கள் எளிதில் நம்பி விடுகின்றனர்.

இது ஒரு மோசடிச் செயல், என வேதனை தெரிவித்துள்ளார். இந்த காணொளிகளைப் பதிவேற்றும் 45 வயது தொழிலதிபர் ஒருவர் கூறுகையில், யாரையும் ஏமாற்றும் நோக்கம் எனக்கு இல்லை, அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது நோக்கம் என்று நியாயப்படுத்தியுள்ளார்.

ஜப்பானில் அரசியல் பிரச்சாரத்தை கைப்பற்றிய AI தொழில்நுட்பம் | Japanese Voters Are Being Harassed Fake Ai Videos

இருப்பினும், எக்ஸ் போன்ற தளங்களில் பகிரப்படும் போது ஏஐ என்ற குறிப்பு நீக்கப்படுவதால், இது திட்டமிட்ட போலி பிரசாரமாகவே பார்க்கப்படுகிறது.

ஏஐ தொழில்நுட்பத்தின் ஆபத்துக்களைக் கருத்தில் கொண்டு, ஜப்பான் அரசு ஏற்கனவே 2025 மே மாதம் ஒரு புதிய சட்டத்தை இயற்றியது. இதன்படி, AI மூலம் தவறான தகவல்களைப் பரப்பும் நிறுவனங்களின் பெயர்களை அரசு பகிரங்கப்படுத்தும். இருந்தபோதும், தேர்தல் நேரத்தில் இத்தகைய காணொளிகள் கட்டுக்கடங்காமல் பரவுவது பெரும் சவாலாகவே உள்ளது.

ஜப்பான் வாக்காளர்கள் எவை உண்மையான பிரசார காணொளிகள் என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ள நிலையில், தேர்தல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.

31ம் ஆண்டு நினைவஞ்சலி

வத்திராயன் வடக்கு வேம்படி, ஜேர்மனி, Germany, இத்தாலி, Italy

30 Jan, 1995
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
மரண அறிவித்தல்

சூராவத்தை, உயரப்புலம்

30 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி தெற்கு, London, United Kingdom

28 Jan, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இணுவில், New Malden, United Kingdom

04 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, மயிலியதனை, கொம்மந்தறை

02 Feb, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இலுப்பைக்கடவை

01 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

அளவெட்டி, Chigwell, United Kingdom

26 Jan, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, வெள்ளவத்தை

30 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Horsens, Denmark

23 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, பூநகரி, அரியாலை, London, United Kingdom

01 Feb, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, பரிஸ், France

12 Feb, 2006
மரண அறிவித்தல்

கொழும்பு, India, Westerwald, Germany, London, United Kingdom

13 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி, வவுனியா

30 Jan, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

03 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Zürich, Switzerland

02 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுதுமலை தெற்கு, பிரான்ஸ், France

25 Jan, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Épinay-sur-Seine, France

29 Jan, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Mississauga, Canada

29 Jan, 2026
மரண அறிவித்தல்

துணுக்காய், யாழ்ப்பாணம், Toronto, Canada

27 Jan, 2026
மரண அறிவித்தல்

Tellippalai, சென்னை, India

26 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Toronto, Canada

29 Jan, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சுவிஸ், Switzerland

29 Jan, 2021
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Zürich, Switzerland

25 Jan, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Basel, Switzerland

25 Jan, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, காரைநகர், Birmingham, United Kingdom, Croydon, United Kingdom

21 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US