மொத்த சொத்துக்களையும் என்ன செய்யப் போகிறேன்: அமேசான் நிறுவனர் வெளிப்படை
தனது 124 பில்லியன் டொலர் சொத்துக்களில் பெரும்பகுதியை தானமாக அளிக்க இருப்பதாக அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தெரிவித்துள்ளார்.
அமேசான் நிறுவனரும், தனியார் விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின் உரிமையாளருமான ஜெஃப் பெசோஸ் உலகின் நான்காவது மிகப்பெரிய பணக்காரர்.
சமீபத்தில் செய்தி ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில், தமது சொத்துக்களில் பெரும்பகுதியை தானமாக அளிக்க இருப்பதாக ஜெஃப் பெசோஸ் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக, தமது சொத்துக்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்து வந்துள்ள ஜெஃப் பெசோஸ், அமெரிக்க செய்தி ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் வெளிப்படையாக, தாம் என்ன செய்யப் போகிறேன் என்பதை கூறியுள்ளார்.
124 பில்லியன் டொலர் சொத்தில் பெரும்பகுதியை காலநிலை மாற்றத்திற்கான தேவைகளுக்கு செலவிட இருப்பதாகவும், ஆழமான சமூக மற்றும் அரசியலால் பிளவுபட்டிருக்கும் மக்களை மனிதத்தன்மையுடன் ஒருங்கிணைப்பவர்களை ஆதரிக்கவும் முடிவு செய்துள்ளதாக ஜெஃப் பெசோஸ் தெரிவித்துள்ளார்.
ஆனால் மொத்த சொத்தில் அது எத்தனை சதவீதம் என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துள்ளார்.