60 வயதில் 2அவது திருமணத்திற்கு தயாராகும் உலகின் இரண்டாவது பணக்காரர்!
உலக பணக்காரர் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள அமோசன் நிறுவனர் 0 வயதான ஜெஃப் பெசோஸ் தனது இரண்டாம் திருமணத்துக்குத் தயாராகி வருகிறார்.
தனது நீண்ட நாள் காதலியான 54 வயதாகும் தொலைக்காட்சி பிரபலம் லாரன் சான்செஸ் உடன் அவரது திருமணம் நடைபெறவுள்ளது.
இவர்கள் இருவருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி திருமணம் நடைபெற உள்ளதாக அமெரிக்காவில் உள்ள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் இவர்கள் விடுமுறைக்கு வழக்கமாக ஆஸ்பென் நகருக்கு அடிக்கடி சென்று வருவர்.
இந்நிலையில் அந்த ஆஸ்பென் நகரில் வைத்தே தங்கள் திருமணத்தைப் பிரமாண்டமாக நடந்த இவர்கள் திட்டமிட்டுள்ளார்களாம்.
இந்த திருமண விழாவில் அமெரிக்க பிரபலங்கள் பலர் கலந்துகொள்ள உள்ளதாகவும் குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.