தங்கம் விலை சரிவால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
சென்னையில் தங்கம் விலை கடந்த மூன்று நாட்களாக ஏற்ற இறக்கம் இன்றி ஒரே விலையில் விற்பனையாகி வந்த நிலையில் இன்று (5) மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளதாக நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதன்படி தங்கம் விலை இன்று (5) ஒரு கிராமுக்கு 15 ரூபாய் மற்றும் ஒரு சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ள நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ரூபாய் 7,355 என விற்பனையாகிறது.
இன்றைய தங்கவிலை நிலவரம்
அதேபோல் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 குறைந்து ரூபாய் 58,840 என விற்பனையாகி வருகிறது.
அதேபோல 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,860 எனவும் ஒரு சவரன் ரூபாய் 62,880 எனவும் விற்பனையாகி வருகிறது.
மேலும் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 105.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 105,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது