கனடாவில் அடையாளத்தை மறைக்கும் யூத மாணவர்கள்
கனடாவில் தாங்கள் பாதுகாப்பற்ற நிலயை உணர்வதாக யூத மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரதான பல்கலைக்கழகங்களில் கற்று வரும் யூத மாணவர்கள் தங்களது அடையாளத்தை மறைத்து வாழ வேண்டியேற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
யூத மாணவர்கள் அணியும் தலையங்கியை (kippot ) தற்பொழுது அணிவதில்லை எனவும் அதற்கு பதிலாக பேஸ்போல் தொப்பி அணிவதாகவும் யூத மாணவர் அமைப்பு தலைவர் தெரிவித்துள்ளார்.
யூத மாணவர்கள் உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் துன்புறுத்தல்களை எதிர்நோக்கும் பின்னணி உருவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் ஹமாஸ் போர் காரணமாக யூத மற்றும் பலஸ்தீன எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உலகின் பல நாடுகளின் பல்கலைக்கழகங்களில் இஸ்ரேலுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.