பிரிட்டன் தெருக்களில் ஒலித்த 'ஜிகாத்' கோஷங்கள்; சினத்தில் ரிஷி சுனக்!
இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் பிரிட்டனின் பெல்பாஸ்ட், பிர்மிங்காம், கார்டிப் உள்ளிட்ட நகரங்களில் பேரணி இடம்பெற்றது.
கடந்த 7 ஆம் திகதி இஸ்ரேல் - ஹமாஸ் இடையே இரண்டு வாரங்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது.
இஸ்ரேல் வெற்றி பெறவேண்டும் - ரிஷி சுனக்
இதில், காசா நகரில் உள்ள அல்-அஹ்லி மருத்துவமனை மீது கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்தப்பட்ட தாக்குதலில் சுமார் 500 பேர் உயிரிழந்த சம்பவம் உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அதோடு இஸ்ரேல் - ஹமாஸ் போரில் அப்பாவி பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என 5000 இற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில், ஹமாஸுக்கு எதிரான மோதலில் இஸ்ரேல் வெற்றி பெறவேண்டும் என பிரதமர் ரிஷி சுனக் , பெஞ்சமின் நெதன்யாகுவிடம் அண்மையில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் பிரிட்டனின் பெல்பாஸ்ட், பிர்மிங்காம், கார்டிப் உள்ளிட்ட நகரங்களில் நேற்று பேரணி நடந்தது.
இதில், ஏராளமானோர் கலந்து கொண்டதுடன் ஜிகாத் தொடர்பான கோஷங்கள் எழுப்பப்பட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில் ஹமாஸுக்கு ஆதரவான குறித்த பேரணிக்கு பிரதமர் ரிஷி சுனக் கண்டனம் வெளியிட்டுள்ளார்.