அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் முதல் முறையாக இடம்பெறவுள்ள நிகழ்வு!
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் பேத்தி 28 வயதான நோமியின் திருமணம் வெள்ளை மாளிகையில் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜோ பைடனின் மகன் ஹிண்டரின் மகளான நோமியும், பீட்டர் நீலும் (25) கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இவர்களின் திருமணத்தை வெள்ளை மாளிகையில் நடந்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
மேலும் வெள்ளை மாளிகையில் நடைபெறும் 19-வது வரலாற்று திருமணம் இதுவாகும்.
அமெரிக்க ஜனாதிபதி பதவியில் இருக்கும் அதிபரின் பேத்தி, வெள்ளை மாளிகையில் மணமகளாக நடந்து செல்லும் முதல் நிகழ்வு இதுவாகும்.
இதுவரை ஜனாதிபதிகளின் மகள்களுக்கு வெள்ளை மாளிகையில் திருமணம் நடந்துள்ளது.
ஆனால் முதல் முறையாக வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி பேத்திக்கு திருமணம் நடைபெற உள்ளது.