ரஷ்யப் படைகளை தடுக்க... உக்ரைனுக்கு பாரிய ஆயுதங்களை வழங்கும் ஜோ பைடன்!
ரஷ்ய படையினரின் முன்னேற்றத்தை தடுப்பதற்காக உக்ரைனுக்கு கண்ணிவெடிகளை வழங்குவதற்கு ஜோ பைடன் அனுமதி வழங்கியுள்ளார்.
மேலும், பொதுமக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இந்தகண்ணி வெடிகளை பயன்படுத்தப்போவதில்லை என உக்ரைன் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பிட்ட காலம்வரை செயற்பாட்டில் இருக்கும் விதத்திலேயே கண்ணிவெடிகளை பயன்படுத்தப்போவதாகவும் உக்ரைன் உறுதியளித்துள்ளது.
இதேவேளை, நிலக்கண்ணி வெடிகள் தொடர்பான ஜோ பைடனின் தீர்மானத்தை உக்ரைன் படையினர் வரவேற்பார்கள் ஆனால் உலகின் ஏனைய பகுதிகளில் இது மிகவும் சர்ச்சைக்குரியதாக காணப்படும் என சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை பொறுத்தவரை இது மிகவும் முக்கியமான கொள்கை மாற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவிவகித்தவேளை அமெரிக்க படையினர் நிலக்கண்ணிவெடிகளை பயன்படுத்துவதற்கான கட்டுப்பாட்டை நீக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை ஜோ பைடன் அவ்வேளை கடுமையாக விமர்சித்திருந்தார்.