இனி நான்கு நாட்கள் தான் வேலை: நாடொன்று வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு!
பெல்ஜியம் அரசாங்கம் நான்கு நாட்கள் வேலை திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த 2021 செப்டம்பர் மாதத்தில் ஐரோப்பா நாடான ஸ்காட்லாந்து சோதனை அடிப்படையில் நான்கு நாட்கள் வேலை திட்டத்தை அறிவித்தது. அதைத் தொடர்ந்து, ஐஸ்லாந்து, ஸ்பெயின் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் சோதனை அடிப்படையில் நான்கு நாள் வேலைத் திட்டத்தை அறிவித்தன. இருப்பினும், மேற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 2021 டிசம்பரில் அதிகாரப்பூர்வமாக நான்கு நாள் வேலை நாளை நடைமுறைப்படுத்தியது.
இதற்கிடையில், ஐரோப்பிய நாடான பெல்ஜியமும் வாரத்தில் நான்கு நாள் வேலை திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, பார்லி., அனுமதிக்கு பின், நான்கு நாள் வேலை திட்டம், மே அல்லது ஜூன் மாதத்தில் அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த பெல்ஜியம் பிரதமர் அலெக்ஸாண்ட்ரே டி குரூஸ்,
“கொரோனா காலத்தில் மாறிவரும் பணிச்சூழலுக்கு ஏற்ப தொழிலாளர் சந்தையும் மாற வேண்டும். இந்தத் திட்டம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதையும், குடும்பம் மற்றும் வேலைக்குச் சமமான நேரத்தை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது,” என்றார்.
மேலும் ஊதியக் குறைப்பு இல்லை, வாரத்தில் 38 மணி நேரம் வேலை செய்யலாம், வாரத்தில் கூடுதல் நேரம் வேலை செய்யலாம், அடுத்த வாரம் குறைக்கலாம், வேலை நேரம் முடிந்ததும் கம்ப்யூட்டர் உள்ளிட்ட சாதனங்களை ஆஃப் செய்யலாம், மொபைல் போனில் வேலை தொடர்பான செய்திகளைப் பார்க்க வேண்டாம். வேலை நேரத்திற்கு பிறகு.