காதலியின் வீடியோவில் தலையைக் காட்டும் ட்ரூடோ: ஒரு வைரல் வீடியோ
கனடாவின் முன்னாள் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவும், பிரபல அமெரிக்க பாடகியான கேற்றி பெர்ரியும் காதலிக்கும் விடயம் உலகம் அறிந்ததே.
இந்நிலையில், சமூக ஊடகம் ஒன்றில், ட்ரூடோவும் கேற்றி பெர்ரியும் நடனமாடும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

பாடகி கேற்றி பெர்ரி, ‘Watch It Burn’ என்னும் ஒரு மியூசிக் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், அந்த பாடலுக்கு கேற்றி பெர்ரி நடனமாடுவதைக் காட்டும் டிக் டோக் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில், கேற்றி பெர்ரியின் காதலரும் கனடாவின் முன்னாள் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவும் தலை காட்டியுள்ளார். அந்த வீடியோ வைரலாகியுள்ளது.
விடயம் என்னவென்றால், அந்த பாடல், தான் சமீபத்தில் சந்தித்த கடினமான காலகட்டங்களைக் குறித்து கேற்றி பெர்ரி பாடும் பாடலாகும்.
அவற்றில் ஒன்று, கேற்றி பெர்ரி தன் காதலரான ஓர்லாண்டோ ப்ளூம் என்பவரை பிரிந்ததாகும்.
அந்தப் பிரிவால் தனக்கு ஏற்பட்ட கோபம் போன்ற உணர்வுகளை அந்தப் பாடலில் வெளிப்படுத்தும் கேற்றி பெர்ரி, கடைசியாக தான் நடந்ததை மன்னிக்கவும் மறக்கவும் முயற்சி செய்யப்போவதாக கூறி பாடலை முடிப்பார்.
விடயம் என்னவென்றால், தன் முன்னாள் காதலரைப் பிரிந்ததால் ஏற்பட்ட கோபத்தைக் குறித்து கேற்றி பெர்ரி பாடும் பாடலில், இந்நாள் காதலரான ஜஸ்டின் ட்ரூடோ தலை காட்டியுள்ளது சற்று அபத்தமாக உள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.