தவிப்பில் இருந்த உக்ரைன் அதிபருக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடமிருந்து வந்த அழைப்பு!
கனடிய நாடாளுமன்றத்தில் உரையாற்ற உக்ரைன் அதிபர் செலன்ஸ்கிக்கு (Volodymyr Zelenskyy) கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau)அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா 14 வது நாளாகவும் போர் தொடுத்து வருகிறது.
தலைநகர் கீவ் உட்பட நாட்டின் கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் உள்ள நகரங்களில் ரஷிய விமானங்கள் இரவில் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது.
ரஷ்யாவின் தாக்குதலால் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 20 லட்சம் பொதுமக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இந்த நிலையில், கனடாவின் நாடாளுமன்றத்தில் உரையாற்ற உக்ரைன் அதிபர் செலன்ஸ்கிக்கு (Volodymyr Zelenskyy) கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,
கனடா நாடாளுமன்றத்தில் உரையாற்ற உக்ரைன் அதிபர் செலன்ஸ்கிக்கு (Volodymyr Zelenskyy) அழைப்பு விடுத்துள்ளேன். உக்ரேனியர்களின் துணிச்சல் மற்றும் பின்னடைவு மற்றும் அதிபர் காட்டிய தலைமை ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டுள்ளனர்.
உக்ரைனுக்கு சிறப்பு ராணுவ உபகரணங்கள் வழங்கப்படும் என அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கியிடம் (Volodymyr Zelenskyy)தெரிவித்தேன்.
ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் மற்றும் மனிதாபிமான உதவிகள் குறித்தும் செலன்ஸ்கியிடம் ஆலோசித்தேன் என ட்ரூடோ (Justin Trudeau) பதிவிட்டுள்ளார்.